இதுவரை கொரோனா வைரஸ் நோர்வேயை அடையவில்லை – Faktisk.no

இதுவரை கொரோனா வைரஸ் நோர்வேயை அடையவில்லை – Faktisk.no

நோர்வேயில் இதுவரை எவருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதார நிறுவனம் (Folkehelseinstituttet) கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில், Oslo, Tromsø மற்றும் Stavanger ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இதை பொது சுகாதார நிறுவனம் (Folkehelseinstituttet) முற்றாக நிராகரிக்கின்றது.

VG மற்றும் Stavanger Aftenblad போன்றவற்றிலிருந்து வந்ததைப் போல் தோற்றமளிக்கும் போலிக் கட்டுரைகளும் பகிரப்பட்டுள்ளன.

Skjermbilde fra Twitter.

கொரோனா வைரஸ் நோர்வேக்கு வந்துவிட்டதாகவும், Oslo, Tromsø மற்றும் Stavanger ஆகிய இடங்களில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை சமூக ஊடகங்களில் செய்திகள் வரத்தொடங்கின. இந்த செய்திகளை பொது சுகாதார நிறுவனம் (Folkehelseinstituttet) முற்றாக நிராகரித்துள்ளது.

“இதுவரை, நோர்வேயில் எந்த ஒரு கொரோனா வைரஸும் கண்டறியப்படவில்லை” என்று FHI இன் தொற்று கட்டுப்பாட்டு காவலரான Helena Eide வியாழக்கிழமை காலை Faktisk.no விடம் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: Faktisk.no

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments