இதுவரை சிறீலங்காலில் 718 கொரோனா தொற்று!

You are currently viewing இதுவரை சிறீலங்காலில் 718 கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு நேற்று இரவு 11.15 மணியளவில் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 708 இலிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றிய 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 718 பேரில் தற்போது 527 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 176 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது

பகிர்ந்துகொள்ள