இத்தாலிக்கு விரையும் ரஷ்ய, கியூப மற்றும் கரீபியன் அவசர உதவிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

இத்தாலிக்கு விரையும் ரஷ்ய, கியூப மற்றும் கரீபியன் அவசர உதவிகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

ரஷ்யா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இத்தாலிக்கான அவசர உதவியாக மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளன.

“கொரோனா” பரவலால் உலகளாவிய ரீதியில் அதிகளவில் மக்களை பலிகொடுத்த நாடாக இத்தாலி மாறியிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புதின் /Vladimir Putin” அவர்களின் விசேட உத்தரவின் பேரில், அவசர மருத்துவ உபகரணங்களுடனும், சுகாதார சேவையாளர்களுடனும், ரஷ்ய இராணுவ விமானங்கள் இத்தாலி நோக்கி விரைந்துள்ளதாக “AP” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கியூபா மற்றும் கரீபியன் தீவுகளும் இத்தாலிக்கான அவசர மருத்துவ உபகரணங்களையும், மருத்துவ சேவையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளன என “ரொய்ட்டர்ஸ் / Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த