இத்தாலியின் “தொற்றுப் பாத்திரம்” ; வைரஸின் திருவிழா!

இத்தாலியின் “தொற்றுப் பாத்திரம்” ; வைரஸின் திருவிழா!

Champions League” திருவிழாவுக்கு 45,000 பார்வையாளர்கள் கூடியிருந்தனர். சில நாட்களுக்குப் பின்னர், இத்தாலியின் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் இத்தாலி உலகில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியது!

பிப்ரவரி 19, 2020: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் உலகச் செய்தியாகிவிட்டது. இந்த வைரஸ் இப்போது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஆனால் சில நாட்களுக்குப் பின்புதான் இந்த வைரஸ் தங்களை மிக மோசமாக, மிருகத்தனமாக தாக்கவுள்ளதை ஐரோப்பிய மக்கள் உணரத் தொடங்கினர்.

ஒரு மாதத்திற்குப்பின், இத்தாலி உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக மாறியது. இன்று மார்ச் 26, கிட்டத்தட்ட 75,000 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, 7500 பேர் இறந்துவிட்டதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணளவாக 45,000 க்கும் குறைவான பார்வையாளர்களைக் கொண்ட அந்த மைதானம், ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒரு முழுமையான “தொற்றுப் பாத்திரம்” என்று அழைக்கப்படுகின்றது. இத்தாலியில், அந்த விளையாட்டு போட்டியானது “Game Zero” என்று பெயரிடப்பட்டுள்ளது (“நோயாளி 0” என்ற வார்த்தையின் குறிப்பு – முதல் தொற்று நோயாளியை குறிக்கும்).

நகரசபைத் தலைவர் Giorgio Gori கூறுகையில், நிலைமை இவ்வளவு கடுமையாக மாறியதற்கு San Siro மக்கள் திருவிழா சிறிதளவேனும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மேலும் இதை ஒரு “உயிரியல் குண்டு” என்றும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல் : Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments