இத்தாலியின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி குணமடைந்துள்ளார்!

You are currently viewing இத்தாலியின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி குணமடைந்துள்ளார்!

இத்தாலியில் முதல் கொரோனா நோயாளியாக அறியப்பட்ட 38 வயதான நபர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின் குணமடைந்துள்ளார்.

Mattia என்ற பெயரில் அறியப்படட இவர், சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 18 நாட்கள் கழித்த பின்னர் இப்பொழுது குணமடைந்துள்ளார். இவர் இன்னும் ஒரு சில நாட்களில் தந்தையாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

கடந்த வாரம், இத்தாலிய ஊடகங்கள் அவரது தந்தை இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டன. இவரது தந்தை இத்தாலியில் தொற்று வெடிப்பு தொடங்கிய Lombardia நகரங்களில் ஒன்றில் வசித்து வந்தார்.

Mattia விற்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இந்த வைரஸ் நாட்டில் இருந்ததாகவும், கடந்த இலையுதிர்காலத்தில் நிமோனியாவால் இறந்த சில நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். (NTB)

மேலதிக விபரம்: VG

பகிர்ந்துகொள்ள