இத்தாலியில் பிரபல கால்பந்து வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!

You are currently viewing இத்தாலியில் பிரபல கால்பந்து வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!

இத்தாலியின் மிலன் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அர்செனல் கால்பந்து நட்சத்திரம் மீது கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தாக்குதலை முன்னெடுத்த 46 வயது நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிலன் நகருக்கு அருகாமையில் உள்ள Carrefour பகுதியிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மூவர் இதுவரை ஆபத்து கட்டத்தை கடக்கவில்லை எனவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது அந்த 46 வயது நபர் அங்காடிக்குள் இருந்தே கத்தியை உருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில், அர்செனல் டிஃபெண்டர் பாப்லோ மாரி புறமுதுகில் ஆழமான காயங்களுடன் தப்பியுள்ளார். இதனையடுத்து மக்கள் துணிச்சலுடன் அந்த நபரை எதிர்கொண்டு, தாக்குதலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அர்செனல் டிஃபெண்டர் பாப்லோ மாரி தொடர்பில் அர்செனல் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இத்தாலியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்த பயங்கரமான செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

எங்களில் ஒருவரான பாப்லோ மாரியும் இதில் சிக்கியுள்ளார் என்பதுடன், அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். அர்செனல் டிஃபெண்டர் பாப்லோ மாரி தற்போது இத்தாலிய கால்பந்து அணி ஒன்றிற்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments