இத்தாலியில் 2 பேர் பலி ; கொரோனா வைரஸ்!

இத்தாலியில் 2 பேர் பலி ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியில் 2 பேர் பலியாகினர்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதியவர் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியில் இன்று நடைபெற இருந்த் 3 சிரீ ஏ கால்பந்து போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன(?). மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த