இத்தாவிலில் இரண்டு சிறுவர்கள் பலி!

இத்தாவிலில் இரண்டு சிறுவர்கள் பலி!

கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பளை காவல்த்துறை பிரிவிற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் சற்றுமுன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனது

இதன்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற தந்தையார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தாவிலில் இரண்டு சிறுவர்கள் பலி! 1
பகிர்ந்துகொள்ள