இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்றவர் கைது!!

இந்தியாவிற்கு  சட்டவிரோதமாக சென்றவர் கைது!!


சட்ட விரோதமாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கையர் ஒருவரை இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைசேர்ந்த 30 வயதுடைய பிரதீப் குமார் பண்டாரநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு ஊடாக தமிழகத்துக்குள் சிலர் ஊடுருவி உள்ளதாக இராமேஸ்வரம் மெரைன் காவல்த்துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த இரகசிய தகவலுக்கமைய தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்று இரவு, ரோந்து பணியில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து, பொலிஸார் விசாரணை செய்தபோது, அவர் இலங்கையர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பிடிப்பட்டவர் சிங்களம் பேசுவதால் இவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments