இந்தியாவிலிருந்து கடல்வழியாக மன்னாருக்குள் நுழைந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் – கீரிமலைக்கு வந்தவர் சிக்கினார்

இந்தியாவிலிருந்து கடல்வழியாக மன்னாருக்குள் நுழைந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் – கீரிமலைக்கு வந்தவர் சிக்கினார்

இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் – கீரிமலைக்கு வந்த ஒருவர் நேற்றய தினம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2 ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் கீரிமலைக்குச் செல்வதற்கு பேரூந்தில் பயணிக்கும் சமயம் அகப்பட நேரிடும் எனக் கருதி முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டிக்கு 8 ஆயிரம் ரூபா பணம் வழங்கி கீரிமலையில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது சகோதரியின் குடும்பமும் இந்தியாவில் இருந்து வலுகை தந்த 28 வயது இளைஞரான ஜெகநாதன் ஜெனன் 

ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments