இந்தியாவில் உச்சம் பெறும் கொரோனா; நேற்று 1,15,269 பேருக்கு தொற்று; 631 போ் பலி!

இந்தியாவில் உச்சம் பெறும் கொரோனா; நேற்று 1,15,269 பேருக்கு தொற்று; 631 போ் பலி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் ஒரு நாட்டில் ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.

புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 27 இலட்சத்து 99 ஆயிரத்து 746 ஆக இன்று பதிவாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1 இலட்சத்து 15 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 843,779 ஆக உள்ளது.

செயலில் உள்ள தொற்று நோயாளர் தொகையின் அடிப்படையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

அத்துடன், தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இரண்டாவது அதிக பட்ச கொரோனா மரணங்கள் நேற்று இந்தியாவில் பதிவாகின. நேற்று 631 பேர் உயிரிழந்ததாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றுடன் கொடிய தொற்றுநோயால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 166,208 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரங்களில் 55,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்களும் அங்கு இதுவரை பதிவான தொற்று நோயாளர் தொகையும் வருமாறு,

1. மகாராஷ்டிரா -3,113,354, 2. கேரளா – 1,137,590, 3. கர்நாடகா 1,020,434, 4. ஆந்திரா – 909,002, 5. தமிழ்நாடு – 903,479

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments