இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா!

You are currently viewing இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா!

இந்தியாவில் இன்று காலை 9 மணி வரையான கடந்த 24 மணி 1 இலட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 146 பேர் உயிரிழந்ததாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று 1 இலட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கும் நேற்று முன்தினம் 1 இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று நோயாளர் தொகை மேலும் அதிகரித்துள்ளது. புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் உறுதி செய்யபட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 146 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 83 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 172 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 7 இலட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments