இந்தியாவில் கொரோனா ; ஒரே நாளில் 6,566 பேருக்கு தொற்று, 194 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா ; ஒரே நாளில் 6,566 பேருக்கு தொற்று, 194 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 158,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 194 பேர் உயிரிழந்துள்ளதால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. இதில் 67,692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,190 பேர் பாதிக்கப்பட்டதுடன், 105 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு 57,000 நெருங்கி வருகிறது. டெல்லி மற்றும் குஜராத்தில் பாதிப்பு 15.000ஐ கடந்துள்ளது.

குறிப்பாக தலைநகரில் 24 மணி நேரத்தில் 792 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முதல் தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments