இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியது. 73 இலட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 49,881 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 80,40,203 என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517 இறப்புகள் அதிகரித்துள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்ட 6,03,687 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 73,15,989 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.அதே நேரத்தில் 1,20,527 பேர் தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.

மீட்பு எண்ணிக்கை 90.99 விழுக்காடாகவும், இறப்பு எண்ணிக்கை 1.50 விழுக்காடாகவும் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராட்டிய மாநிலம் 43,554 இறப்புகள் உட்பட மொத்தம் 16,60,766 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தரவுகளின்படி, இந்தியா நேற்று ஒரே நாளில் 10,75,760 கொரோனா மாதிரி சோதனைகளை நடத்தி உள்ளது, இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையை 10,65,63,440 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள