இந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகின்றது!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை  3 இலட்சத்தை நெருங்குகின்றது!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்:

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ் தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர் என கூறி உள்ளது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.

3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.

பகிர்ந்துகொள்ள