இந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று 718 ஆக உயர்வடைந்து இருந்தது. 4,749 பேர் குணமடைந்தும், 17,610 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 775 ஆக உயர்வடைந்து உள்ளது. 5063 பேர் குணமடைந்தும், 18,668 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077ல் இருந்து 24,506 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 6,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 301 பேர் பலியாகி உள்ளனர். இது நேற்று 283 ஆக இருந்தது. 840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments