இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் புதிதாக 8909 பேருக்கு தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

மேலும் 219 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 5,753 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கொரோனாவால் உயிரிழந்தோர் அளவு 2 புள்ளி 8 விழுக்காடாக உள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 72 ஆயிரத்து 300 ஐ தொட்டுள்ளது. அங்கு 2,465 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments