இந்தியாவுக்கு சீனா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

You are currently viewing இந்தியாவுக்கு சீனா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்றும் சீனா கூறுகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த சீன கப்பல் இலங்கைக்கு செல்வதற்கு ஆரம்பம் முதலே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த கப்பல் விவகாரம் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments