இந்தியாவை கண்டிக்கிறது தமிழர் தேசிய முன்னணி!

இந்தியாவை கண்டிக்கிறது தமிழர் தேசிய முன்னணி!


தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டும் என ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டன் உட்பட பல நாடுகள் இணைந்து கொண்டுவந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்திய அரசு புறக்கணித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏற்கெனவே இதே போன்று ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியிருந்த போதிலும், அதை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. இப்போதும் செயல்படுத்துமா? என்பது ஐயத்திற்குரியதாகும்.

 இலங்கையிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பிரிட்டன் உட்பட 22 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்திய அரசு இப்பிரச்சனையில் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் நழுவிவுள்ள செயல் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களை  ஆழமாகப்  புண்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள