இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

நாணயசுழட்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 49.1 பந்து பரிமாற்றங்களில் இந்திய அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 255 ஓட்டங்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 256 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.

பின்னர் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 37.4 பந்து பரிமாற்றங்களில் 258 ஓட்டங்களை எடுத்து 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டேவிட் வார்னர் 128 ஓட்டங்களும் (112 பந்துகள்) மற்றும் ஆரோன் ஃபின்ச் 110 ஓட்டங்களும் (114 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!