இந்தியா ஈழத்தமிழருக்கு செய்த கறையை மறைக்க தொடரும் முயற்சிகள்!

You are currently viewing இந்தியா ஈழத்தமிழருக்கு செய்த கறையை மறைக்க தொடரும் முயற்சிகள்!
இந்தியா ஈழத்தமிழருக்கு செய்த கறையை மறைக்க தொடரும் முயற்சிகள்! 1

யாழ் மருத்துவமனையில் இந்திய ஆக்கிரமிப்புப்படைகள் 1987.10.21 அன்று நடாத்திய படுகொலைகளில் சுமார் 70 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட அதே நாளில், யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் ஆயுர்வேத மருத்துவ கருத்தரங்கு நடாத்தி, தன் பாவத்தை மறைக்கும் இன்னொரு முயற்சியில் இந்திய ஒன்றியம்….

இந்திய ஒன்றியம் உறுதியளித்த உறுதிப்பாடுகளின் ஆகக்குறைந்த உறுதிப்பாடுகளையாவது நிறைவேற்றக்கோரி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகதீபத்தின் நினைவேந்தலை குழப்பும் முயற்சி…

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து போரிட்டு வீரகாவியமான முதல் பெண் போராளி 2.ம் லெப். மாலதியின் நினைவுநாளில் கிளிநொச்சியில் பண்பாட்டு பெருவிழா என்ற பெயரில் கூத்தாடி குழப்பும் முயற்சி…

தொடர்ச்சியாக, யாழ். வைத்தியசாலையில் இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் கொலைவெறியாட்டத்தின் நினைவுகூரலை மறைக்க இந்த ஆயுர்வேத மருத்துவ கருத்தரங்கு…

உலகத்தில் கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை இந்திய ஒன்றியத்தின் துரோகங்கள் மறக்காது…

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments