இந்தியா – கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா!

  • Post author:
You are currently viewing இந்தியா – கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 69 லட்சம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள