இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

டல் வளத்தை சுரண்டி அழிக்கும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து மன்னார் – பேசாலை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேசாலை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் நேற்று காலை நடைபெற்றுள்ளளது பேசாலை கிராமத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாமல் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருட்தந்தையர்கள்பேசாலை கிராம மக்கள் மீனவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

30 வருட கால யுத்தத்தின் போது தாம் அனுபவித்திராத பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments