இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட வல்வெட்டித்துறை மீனவர்!

இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட வல்வெட்டித்துறை மீனவர்!

இந்திய மீனவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த இரவு வல்வெட்டித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் தனியே தன்னுடைய படகில் ஈடுபட்டிருந்த மீனவரை இந்திய மீனவர்கள் சரமாரியாகத் தாக்கியதுடன், அவருடைய தொலைபேசி, ஜி.பி.எஸ் கருவி, இயந்திரம் என்பவற்றையும் சேதப்படுத்தியதுடன், அவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர். தனியே கரைதிரும்பிய குறித்த மீனவர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதன் பின்னர், தனக்கு ஏற்பட்டுள்ள கண்டல் காயங்கள் குறித்து எக்ஸ்ரே பரிசோதனை செய்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார்.

சம்பவத்தை அறிந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்கு உள்ளான நபரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments