இனத்தை மானசீகமாக நேசித்த ஒரு ஊடகவியலாளரை எமது இனத்திற்காக ஈன்றெடுத்த அன்னைக்கு எமது கண்ணீர் வணக்கம்!!

You are currently viewing இனத்தை மானசீகமாக நேசித்த ஒரு ஊடகவியலாளரை எமது இனத்திற்காக ஈன்றெடுத்த அன்னைக்கு எமது கண்ணீர் வணக்கம்!!

யாழ்ப்பாணத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார் லில்லி திரேஸ் கனடா- ரொறன்ரோவில் தனது 80ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளின் தாக்குதலில் தாயாரும் காயமடைந்திருந்தார். பின்னர் அச்சம் காரணமாக நிமலராஜனின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான நேர்மையான இனத்தை மானசீகமாக நேசித்த ஒரு ஊடகவியலாளரை எமது இனத்திற்காக ஈன்றெடுத்த அன்னைக்கு எமது கண்ணீர் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments