இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீது பயணத்தடை ; அமெரிக்கா!

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீது பயணத்தடை ; அமெரிக்கா!

சிறீலங்கா ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத் தளபதியும், இனப்படுகொலையாளியுமான சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் வழிநடத்திலில் இறுதிப் போரில் சிறீலங்கா படையினர் புரிந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் அடிப்படையிலேயே இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் மீதான தடை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த