இனப்படுகொலை இராணுவத் தளபதிக்கு எதிராக 50 பக்க போர்க்குற்ற ஆவணம்!!

You are currently viewing இனப்படுகொலை இராணுவத் தளபதிக்கு எதிராக 50 பக்க போர்க்குற்ற ஆவணம்!!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொடர்பான, ஐம்பது பக்க ஆவணமொன்றை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு தொடுநர்களினால் சேகரிக்கப்பட்டவையே இந்த ஆதாரங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்கள் இந்த ஆவணங்களின் முக்கியமானவையாக காணப்படுகின்றன எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் முடிவில் இடமபெற்றதாக தெரிவிக்கப்படும் மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் தொடர்பிற்காக 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்தது என ஜஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரிட்டனின் தடை தொடர்பான செயற்பாடுகளின் எல்லை பரந்துபட்டது, இராணுவநடவடிக்கைகளின்போது மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தடை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் – சமீபத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதாக அமையும், பிரிட்டனே இதில் முக்கிய பங்கு வகித்தது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் பாரிய மனித உரிமைமீறல்கள் இழைக்கப்படுவதில் சவேந்திரசில்வாவின் பங்களிப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் மருத்துவமனைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் எறிகணை வீச்சிலிருந்து உயிர்தப்பிய தமிழர்களின் கண்ணால் கண்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை. இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் வசிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

4 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments