இனப்படுகொலை செய்த படைகளை திணரடிக்கும் கொரோனா!

இனப்படுகொலை செய்த படைகளை திணரடிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக அடையாளங்காணப்பட்ட 27 கொரோனா தொற்றாளர்களில் 24 பேர் கடற்படை வீரர்கள் என, சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 583 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

134 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments