இனப்படுகொலை நடக்கவில்லை- ஈபிடிபி !

You are currently viewing இனப்படுகொலை நடக்கவில்லை- ஈபிடிபி !

நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் உண்மையில் இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

குறித்த தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்தில் தமக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை

சிறீலங்காஅரசின் இன அழிப்பின் பங்காளிகளாக இருந்தவர்கள் இப்படி சொல்வதிலும் ஆச்சரியமில்லை என்று கடந்து போவதா அல்லது இந்த துரேகா கூட்டங்களுக்கு வாக்குப்போட்ட மக்களை நொந்துபோவதா என மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments