இன்னுமொரு கூட்டமைப்பை உருவாக்கிறதுக்கு நாங்கள் தயார் இல்லை! கஜேந்திரகுமார்

இன்னுமொரு கூட்டமைப்பை உருவாக்கிறதுக்கு நாங்கள் தயார் இல்லை! கஜேந்திரகுமார்

கூட்டமைப்பு தவறு என்று என்று சொல்லிக் கொண்டு அதே தவறுகளைச் செய்யக் கூடிய தரப்புக்களோடு இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நேர்மையாக உண்மையாக செயற்படக் கூடிய எங்களது தரப்பு வளர்ந்துவிடக்கூடாது என்பதில் பல்வேறு சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக அணியொன்று உருவாக்கப்படுகின்ற நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ் மக்கள் மட்டத்தில் இருக்கக் கூடிய சவால் இந்த பத்து வருசத்தில் எங்களுக்கென்று தலைமைத்தவம் கிடையாது. இருக்கவில்லை. வேறு வேறு தரப்புக்களின் தேவைக்காக இருந்த முகவர்கள் தான் இருந்திருக்கிறார்களே தவிர தமிழ் மக்களுக்கென்று ஒரு தலைமைத்தவம் இல்லை.

2009 மே மாதத்திற்கு பிற்காடு தலைமைத்துவம் இல்லை. வெற்றிடம் தான் இருந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கென்று தலைமைத்துவம் இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. ஆழமாகப் பார்த்தால் அது தான் யதார்த்தம்.  தலைமை என்று ஏமாந்து வாக்களித்த மக்கள் இன்றைக்கு வெறுப்பில் நிராகரித்து ஒரு புதியதை தேடுகின்றனர். அந்தப் புதியது ஒரு சரியான நேர்மையான உண்மையான ஒரு புதிய நேர்மையாக சரியான கலாசாரத்தை ஏற்படுத்தக் கூடிய தரப்பாக நாங்கள் எங்களை அடையாளப்படுத்த வேண்டும். அதை; தான் நாங்கள் செய்ய் வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு பிழை என்று சொல்லிக் கொண்டு இருக்கிற இடத்தில் கூட்டமைப்பில் நேற்று வரையும் இருந்த பதவிகள் முழுவதையும் அனுபவித்து தங்களுக்கு பதவியில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக நே;றறுவரைக்கும் இருந்துவிட்டு கூட்டமைப்பு நாளைக்கு தோற்கப் போகிறது என்று தெரிய வரும் போது வெளியில் வந்துவிட்டு தாங்கள் தான் அந்த புதிய தலைமைத்துவமாக வர வேண்டுமென்று செயற்படுகிற தரப்போடு; என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட தரப்பொடு எவ்வளவு தூரம் நாங்கள் சேர்ந்து போகலாம் என்பது ஒரு கேள்விக்குறி.

நாங்கள் மிகத் தெளிவாக பார்க்கிறோம் கூட்டமைப்பு பிழை என்று சொல்லிப் போட்டு இன்னுமொரு கூட்டமைப்பை உருவாக்கிறதுக்கு நாங்கள் தயார் இல்லை. அதே போக்கில் அதே பிழைகளைச் செய்த நேற்று வரை அதுக்குள்ள இருந்து முழுமையாக பதவிகளை அனுபவித்து போட்டு இன்றைக்கு ஒரிஐpனல் கூட்டமைப்பு தோற்கடிப்படப் போகிறது ஆகவே தாங்கள் எப்படியாவது வந்து அவர்கள் தோற்:றுப் போகிற இடத்தில் வரலாமென்று பார்க்கின்றனர்.

கூட்டமைப்பு செய்த அதே பிழைகளைச் செய்கிறதற்கு எந்தவொரு இடத்திலும் திருந்துவதற்குத் தயாரில்லாத தரப்புக்களோடு சேர்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மக்களைப் பொறுத்தவரையில் மக்கள் முடிவெடுக்க வேண்டும். கூட்டமைப்பு பத்து வருசம் செய்த பிழைகளுக்கு மாற்றீடாக இன்னுமொரு அதே மாற்றீடாக அதே பிழைகளைச் செய்கிற தரப்பு இன்னுமொரு பெயர்ப்பலகையுடன் வருகிறதென்றால் அதைவிடுத்து நேர்மையாக அர்ப்பணிப்போட செயற்படக் கூடிய கொள்கையில் விட்டுக் கொடுக்காத மிக உறுதியாக இருக்கக் கூடிய புதிய தலைமைத்துவமும் புதிய அரசியல் கலாச்சாரமும் ஒன்றை உருவாக்க வெண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!