இன்று யாழ்ப்பாணத்தில் 19 பேரிடம் கொரோனா சோதனை முடிவுகள்!

இன்று யாழ்ப்பாணத்தில் 19 பேரிடம் கொரோனா சோதனை முடிவுகள்!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள 19 பேருக்கு இன்று பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதிர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள 18 பேருக்கும் இன்று பரிசோதணை நடத்தப்பட்டது.அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.குறித்த பரிசோனைகளின் முடிவின்படி எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments