இன்றைய புள்ளிவிபரங்கள் : மருத்துவ மனைகளில் 58 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

இன்றைய புள்ளிவிபரங்கள் : மருத்துவ மனைகளில் 58 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

நோர்வே மருத்துவமனைகளில் இப்போது 58 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், நேற்றிரவு இது 61 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நாள் முடிவில் சற்று மாறக்கூடும். 58 பேரின் மருத்துவமனை அனுமதியானது, மார்ச் 16 க்கு பின்னரான மிகக் குறைவான எணிக்கையாகும். மார்ச் 15 அன்று 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுவாசக் கருவி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர், நேற்றைய தினத்தைப் போலவே தொடர்ந்தும் சுவாச சிகிச்சையை பெறுகின்றனர். மார்ச் 17 முதல் இந்த எண்ணிக்கையில் பெரிதாக மாற்றம் இல்லை.

தீவிரம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர், இது நேற்று 26 ஆக இருந்தது. மார்ச் 19 முதல் இந்த எண்ணிக்கையில் பெரிதாக மாற்றம்/ குறைவு எதுவும் இல்லை.

நோர்வேயில் இதுவரை 218 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை மொத்தம் 8084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள