இன்றைய விடுதலை தீபங்கள்!

இன்றைய விடுதலை தீபங்கள்!

எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் ‘.!என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள் இல்லாததாலும் என்ன நடைபெறுகின்றதென அறியமுடியாமல் இருந்தது. 

 பின்னேரமாகியும் கிண்ணி முகாம் திரும்பவில்லை. கோட்டையில் அதிகரித்தவண்ணம் உள்ள சத்தங்கள் எனக்குக் கிண்ணியின் இடத்தை உணர்த்தின. குளிக்கும் இடத்தைப் போய்ப் பார்த்தேன். கின்னி குப்பியை விட்டுவிட்டுப் போயிருந்தது தெரியவந்தது. குப்பியை எடுத்துக்கொண்டு கோட்டையை நோக்கிப் போனேன் போகும் வழியெல்லாம் மக்கள் தத்தமது மூட்டை முடிச்சுக்களுடன் குடும்பம் குடும்பமாக யாழ். நகரத்தைவிட்டு அகன்றுகொண்டிருந்தனர். ‘அவ்ரோ’வும் உலங்குவானூர்தியும் மேலே சுற்றிக்கொண்டிருந்தன “கோட்டைக்கு ஆமி வந்துவிட்டான். ரவுணுக்கும் வரப்போகின்றான்” என்றெல்லாம் சனங்கள் பரபரப்பாகக் கதைத்தபடியே, அகன்று சென்றுகொண்டிருந்தார்கள். கோட்டை இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகாமான நீகன் முகாமுக்குப் போய் “கிண்ணி வந்ததோ’ என்று கேட்டேன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை .  “முன்னுக்கு ஆள் நிற்குதோ இல்லையோ என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்று திரும்பவும் கேட்டேன். தொடர்பு எடுத்துக் கேட்டுவிட்டு “கிண்ணியண்ணை பொலிஸ் ஸ்ரேசடியில்  நிற்கிறார்” என்று “வோக்கி வைத்திருந்த போராளி கூறினான். குப்பியை எப்படிக் கொண்டு போவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, “இந்த நேட்டோ ரவுண்சுகளையும் இன்ரமீடியம் ரவுண்சுகளையும் பொலிஸ் ஸ்ரேசனடியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடு” என்று, பொறுப்பாளர் போராளி ஒருவருக்குக் கூறுவது தெரிந்தது. இரண்டு பெரிய பொதிகள்.ஒன்றை மட்டுந்தான் தூக்கலாம்; மற்றதைக் தூக்குவதற்கு இன்னொரு ஆள் தேவை” என்றுஅந்தப் போராளி பதிலளித்தான்.“நான் கொண்டுவாறன்’ என்று கூறியபடியே பையொன்றைத் தோள்மீது அடித்துக் கொண்டு,இருவரும் புறப்பட்டோம். அசோகா ஹொட்டேலுக்குப் போய், அதன்கீழுள் ள சாக்கடைவழியே பொலிஸ் ஸ்ரேசனடிக்குப் போனபோது, அங்கு முன் காவல்நிலையில் படு ‘பிசி’யாகக் கிண்ணி நிற்பதைக் கன்டேன் என்ன சொல்லாமற் கொள்ளாமல் வந்துவிட்டீர்கள்’ என்று கேட்டேன்.ஆமி இறங்கிட்டான் என்னென்று இனி நிற்கிறது, அதுதான் வந்திட்டன்’ என்றான் கிண்ணி.இதேபோலத்தான் இன்னுமொரு முறை. அப்போது ஒரு தவறிற்கான தண்டனை காரணமாகமுகாம் ஒன்றினுள் கிண்ணி முடங்கி இருந்தான். பலாலியில், ஆனையிறவில், தீவுப்பகுதியிற் சண்டை . என்ற செய்தி அடிபட்டது. போகமுடியவில்லையே எனத் துடிதுடித்துப் போனான். தச்சன்காட்டுச் சந்திக் காவலரண்களை அன்று இரவு எமது போராளிகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சண்டையின்போக்கைப்பற்றி வோக்கியிலே கேட்டுக்கொண்டிருந்த கிண்ணி, எமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகஇருந்ததை அறிந்ததால் உடனே எம்16 இனைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்திற்குப் புறப்பட்டுவிட்டான்.இவன் அங்குப் போனபோது வீரச்சாவடைந்த போராளிகளை முன்னுக்கு இருந்து பின்னுக்குஎடுத்துக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்திற் காயப்பட்ட நிறையப்பேர் கிடந்தனர். அவர்களைவைத்தியசாலைக்கு அனுப்ப வழியில்லாமல் இருந்தது.அம்புலன்ஸ் எங்கே? அம்புலன்ஸ் எங்கே? என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தார்கள்அம்புலன்ஸ் சாரதி அம்புலன்சைச் செலுத்திக்கொண்டு வந்தார். அவர் வெளிச்சத்தைப் போட்டுக்கொண்டுவந்ததால் அதைநோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம்செய்து, எறிகணைகளையும்போட்டனர். இதனால் அச்சாரதி அம்புலன்சை இடைநடுவில் விட்டுவிட்டு ஓடிவிட்டார். அவர் ஒரு குடிமகன் . வாகனமோட்டுவதற்காக அழைக் கப்பட்டிருந்தார். காயமடைந்தவர்கள்அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். கிண்ணி பார்த்தான் அந்த நேரத்தில் அதுதான் முக்கியம் என்று பட்டது. துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியிலேயே மெதுமெதுவாக அம்புலன்சைக் கொண்டுவந்து 4, 5 பேராகப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுபோய் இறக்கினான். இவ்வாறாகக் காயமடைந்தமுழுப்போராளிகளையும் பின்னாலுள்ள முதலுதவி இடத்திற்கும் பின்பு மருத்துவமனைக்குமாக இரவுமுழுவதும் ஓடித்திரிந்தான் மறுநாட் பின்னேரம் நான் கிண்ணியின் இடத்திற்குப் போனேன்.“நேற்று நான் சண்டைக்குப் போனனான் தெரியுமா” என்று கிண்ணி சொன்னான் நான்திடுக்கிட்டேன் . ஏனெனில், அந்த முகாமைவிட்டு கிண்ணியை அனுமதி இல்லாமல் வெளியேறவேண்டாம் என்ற உத்தரவு இருந்தது. நான் பேசாமல் இருப்பதைக் கண்டகிண்ைணி,சண்டைக்குப் போனதற்காக யாரும் தண்டனை தந்தால், நான் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்”என்று கூறியவன் சிரித்தான். பின்பு, அங்கே நான் போகேக்கை சண்டை முடிஞ்சுபோயிட்டுது. பார்த்தாற் காயப்பட்ட பொடியள்நிறையப்பேர் இருந்தார்கள். பிறகென் னை, அம்புலன்ஸ் எடுத்து ட்ரைவர் வேலை பார்த்தேன்” என்றான் மனநிறைவுடன்.  இதுதான் கிண்ணி, எங்குச் சண்டை நடக்கிறதோ அங்குப் போகத் துடிப்பவன். “அடிக்கவேண்டும்,ஆயுதங்கள் எடுக்கவேண்டும்’ இதுதான் அவனது வெறி. அவன் எத்தனை தரம் போரிற் காயப்பட்டான் என்று எண்ணிக்ச்சொல்வது கடினம். இடது பக்கம் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரைக்கும் இவன் காயப்படாத இடமில்லை. கிண்ணி ‘சேட்”டைக் கழற்றினால், அவனது வீரத்தழும்புகளை எண்ணிமுடிக்க அரைநாள் தேவை.முதன்முதல் கிண்ணியை நான் சந்தித்தது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் நிற்கின்றது. இந்திய இரணுவச் சிறையில் 17 மாதங்களைக் கழித்துவிட்டு அப்போதுதான் விடுதலை யாகியிருந்தேன்.  ஒருவருடனும் கதைக்காது, முகாமின் ஒதுக்குப்புறத் தோட்ட மூலையொன்றில் அமர்ந்துயோசித்துக்கொண்டிருந்தேன் அண்ணை சுகமாயிருக்கிறியளோ’ என்று கேட்டவண்ணம் வந்தவரைப் பார்த்தேன். மெல்லிய,கறுத்து நெடுத்த உருவம். வலது கையிற் சிறிய பையொன்று இருந்தது. கண்கள் துறுதுறுவென்று என்னை ஆழம் பார்த்தன. உதட்டில் நட்புணர்வுடன் ஒரு சிரிப்பு, மேல் இழுத்த தலை. சாரமும்சேட்டும் அணிந்திருந்தவர் தோழமையுடன் எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார்.“என்னைத் தெரியல்லையோ ?” என்று கேட்க, நான் திரும்யவும் பார்த்துவிட்டு, “எங்கோ பார்த்தமுகம் மாதிரி இருக்கிறது, சளியாகத் தெரியவில்லை .” என்று இழுத்தேன். நான் ஈசுவின் தம்பி கிண்ணி” என்றான்.  “ஈசுவின் தம்பியோ “? நானும் ஈசு என்கின்ற கிண்ணியின் மூன்றாவது தமையனும் ஒன்றாகப் படித்தவர்கள். கிண்ணியின் வீட்டுக்கு இயக்கத்திற்கு வருவதற்கு முன்பு எத்தனையோ தடவைகள் நான் போயிருக்கிறேன். அப்போது கிண்ணி சிறிய பையனாக இருந்தவன். நான் சரியாகக் கவனிக்க வில்லை . ஆறு வருடங்களின் பின்பு பார்க்கும்போது, நிறைய வித்தியாசங்கள்.“என்ன செய்யிறியள்’ என்று கேட்டேன்.சும்மாதான் இருக்கிறேன்’ என்றான் கிண்ணி. கிண்ணி இயக்கத்தில் இருப்பது எனக்குத்தெரியாது. முல்லைத்தீவு நகரில் நடந்த சண்டையில் இந்திய இராணுவத்தின் 60 எம்எம் எறிகணையினாற்காயப்பட்டு, சாகும் தறுவாயில் வல்வெட்டித்துறைக்கு வந்ததோ, பொக்ரர் அன் கிண்ணியைக் காட்பாற்றி இந்தியாவுக்கு அழைத்துச்சென்று அவனுக்கு மறு உயிர் கொடுத்ததோ எனக்குத் தெரியாது.(வேர்கள் இணையம் வெளியீடு )  “ஏதாவது படிச்சுக்கொண்டிருக்கிறியளோ அல்லது தொழில் பார்க்கிறியளே’ என்று நான்விடாது கேட்டேன். “இடைக்கிடை இந்தியா பிஸ்னஸ் செய்கிறனான்’ என , யாரும் நம்பும்படியாகவே கிண்ணிகூறினான். இந்தியாவிற் கிண்ணி அறுவைச் சிகிச்சை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடுதிரும்பியதும் எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை .சில நாட்களின்பின் தீவகப் பகுதிக்கு அரசியல் வேலை செய்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். அப்போது ஜேம்ஸ் தீவகப் பொறுப்பாளராகப் பொறுப்பெடுப்பதற்காகச் சென்றார். அவருடன் நானும் வானில் போனபோது, அந்த வானை ஒட்டிக்கொண்டுபோனது கிண்ணிை. நான் கிண்ணியை ஆச்சரியமாகப் பார்த்தேன். கிண்ணி என்னைப் புரிந்துகொண்டவனாகச் சிரித்தான் .  “ஜேம்ஸ் அண்ணை ! கஸ்ரோ அண்ணைக்கு நான் இயக்கம் என்று தெரியாது .” என்றான்.ஜேம்சும் சிரித்துவிட்டு.  கிண்ணிதான் தீவில் எனக்கடுத்த பொறுப்பாளர், அதாவது பிரதித் தளபதி” என்று அழுத்தம்திருத்தமாகக் கூறினார். அதற்குப் பிறகுதான் கிண்ணியின் வரலாற்றை அறிந்துகொண்டேன்.சாதாரண போராளியாக ஆரம்பித்து, சண்டைகளில் தனது திறமையைக் காட்டி படிப்படியாகவளர்ந்தவன் இவன். இயல்பாகவே கிண்ணி ஓர் ஆவேசமான போராளி. மேஜர் பசிலனின் வளர்ப்பிற் சண்டையில் இவன் ஒரு பாயும் புலியாக மாறியதில் ஆச்சரியமில்லை . காட்டுக்குள் இருந்தபோது தலைவரின் பாசறையில் இவன் நிறையக் கற்றுக்கொண்டான். காடு இவனை அனுபவம் வாய்ந்த ஒரு போராளியாக்கியது. இவனது ஆரம்பச் செயற்பாடுகள் அரசியல் வேலையாகவே இருந்தன. மேஜர் ஜேம்ஸ் 83, 84 ஆண்டுக் காலப்பகுதிகளில் வடமராட்சிப் பகுதியில் அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்துகொண்டிருக்கின்றபோது அவனுக்குத் துணையாக நின்றவன் கிண்ணிை. கிண்ணியை இயக்க வேலைகளிற் படிட்டபடியாக ஈடுபடவைத்து, பின்பு முழுநேரப் போராளியாக்கிய பெருமை மேஜர் ஜேம்சுக்கே சேரும். 

வீரம் விளைந்த வல்வை மாநகர் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் கிண்ணி. கந்தசாமித்துரைதம்பதிகளின் நான்காவது மகனாகப் பிறந்த இவன், சிறுவயதிலேயே கல்வியிற் கெட்டிக்காரனாக விளங்கினான். காட்லிக் கல்லூரியில் உயர் வகுப்பிற் கணிதம் படித்துத் தனது திறமையினை வெளிப்படுத்தினான். இவனது சிறுபிராயத்திலேயே தகப்பனார் இறந்த தால் வீட்டில் குடும்பநிலை கஸ்ரமாகியது. குடும்பநிலையை உணர்ந்து கிண்ணி செயற்பட்டான். தனது படிப்புக்கு மத்தியிலும் சிறுசிறு வேலைகள் செய்துவந்தான். கோழிகளை வளர்த்து அதன்மூலம் வீட்டைக் கவனிக்கும் பணியினையும் செய்தான்.  இவனது இரண்டாவது அண்ணன் 1983ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து குடும்பப்பாரம் இவனை அழுத்தியதால், ஆரம்பத்தில் வீட்டிலிருந்தவண்ணமே இயக்கவேலைகளில் ஈடுபட்டான். மேஜர் ஜேம்ஸ் பயிற்சிக்காகப் போனதைத் தொடர்ந்து, கிண்ணி வடமராட்சியில் இயங்கி வந்த எமது இயக்கச் சவர்க்காரத் தொழிற்சாலை யிற் பணியாற்றினான்.அங்குச் சிறப்பாக செயற்பட்டதால் வன்னிப்பகுதியில் சவர்க்காரத் தொழிற்சாலையினை ஆரம்பிப்பதற்காகச்சிறிது காலம் வன்னியில் நின்றான். அதன்பின்பு கொமாண்டோ பயிற்சியினை முடித்துக்கொண்டு,  சிறிதுகாலம் வல்வை இராணுவ முகாமினைச் சுற்றியுள்ள காவலரண்களில் காவல் புரிந்தான். இயக்க வேலைகளில் ஈடுபடும் இயந்திரப் படகுகளைக் கவனிப்பதற்காக வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன்’ வரையும் கடமையாற்றினான். தீவகத்திற்குக் கிண்ணி  தளபதி தீவகத்தின் தளபதியாகக் கிண்ணி பொறுப்பெடுத்தவேளை, நான் அளவெட்டியில் முகாமொன்றில் இருந்தேன். ஆனால், அடிக்கடி கிண்ணியைப் போய்ப்பார்த்துவிட்டு வருவேன். பொறுப்பெடுத்ததிலிருந்து, ஏதாவது தாக்குதல் செய்யவேண்டும் என்று கிண்ணி துடித்துக்கொண்டிருந்தான். கிண்ணி வேவுபார்க்க அனுப்பிய இரு போராளிகளை ஒருநாள் இராணுவம் சுட்டுக்கொன்றது. எப்படியும் இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டுமென்று கிண்ணி ஆவேசமாக அலைந்து திரிந்தான். நான் ஒருமுறை போனபோது, “ஊர்காவற்றுறை வரைபடத்தை ஒழுங்கை ஒழுங்கையாகக் கீறித்தாருங்கள்” என்று கேட்டான்.உங்களுக்கில்லாததோ. நாளைக்குக் கொண்டுவாறன் ” எனப் பதிலளித்தேன். மறுநாளே தாக்குதல் திட்டம் தயாராகிவிட்டது. பானு அண்ணை தனது குழுவினரை அனுப்பியிருந்ததோடு, தானும் நேரே வந்திருந்தார். கிண்ணி நானும் வாறன்’ என்று கூறினேன்.“ஜேம்ஸ் அண்ணையும் வீரமரணமடைஞ்சிட்டார். நானும் நீங்களுந்தான் மிஞ்சியிருக்கிறம். நான் இறங்குகிறன். நீங்கள் வெளியில் நின்றுகொள்ளுங்கோ ‘ என்றான்  “இப்படித்தான் முதலும் சொன்னீர்கள்” என்று சொல்லி ஒருமாதிரி கிண்ணியிடமும் பானுஅண்ணையிடமும் அனுமதிபெற்றுச் சென்றேன், இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்று முகாமை விட்டு முன்னுக்கு ஒரு கிலோ மீற்றர்வரையும் வந்து கிளியர் பண்னுவார்கள். இது தினமும் அதிகாலையில் நடப்பதால், இராணுவம் வரும் பாதைக்கு இரவே நாம் சென்று கிளைமோர்களை ஒழுங்குபடுத்திவைத்து, இராணுவத்தை வரவேற்கத் தயாரானோம். ஒழுங்கையொன்று கடையொன்றிற்கு எதிராக இரண்டாகப் பிரிந்தது. அக்கடையினுட் கிண்ணியும் நானும் ஏனைய 6 போராளிகளும் இருந்தோம். கடைக்கு முன்பக்கத்தைத்தவிர வேறு வாசல்கள் எதுவுமில்லை. ஒழுங்கை கடைக்கு நேர் செங்குத்தாக வந்து, 3 அடி தூரத்தில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. விடியப்போகின்றது. சகல தடயங்களையும்அழித்துவிட்டு, எட்டுப் பேரும் கடைக்குள் இருந்தோம், ஒழுங்கை பிரிந்த பின்னர் இருமருங்கிலும் வேறு குழுக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. நாங்கள் இருந்த கடைக்குட் பெரும் இடநெருக்கடி. பழைய தட்டுமுட்டுச் சாமான்களை ஒருவாறு ஓரமாக ஒதுக்கிவிட்டு நெருங்கி இருந்தோம், மேலேநிமிர்ந்து பார்த்தால், பெரிய குளவிக்கூடு ஒன்று எப்போது விழும் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தது.  நூற்றுக்கணக்கான பெரிய குளவிகள் கொட்டுவோம் என்று பயமுறுத்தினை.“அண்ணை இதுகள் விஷக் குளவிகள், நான்கு ஐந்து ஒன்றாகக் கடித்ததென்றால் ஆளைமுடித்துப்போடும்” என்று போராளியொருவன் எம்மைப் பயப்படுத்தினான். எல்லோரும் குளவிகளைப் பார்ப்பதும் விடியுதா எனப் பார்ப்பதுமாக இருந்தோம்.“இப்படித்தான் நெடுங்கேணித் தாக்குதலையும் திட்டமிட்டு அடிச்சனான். இதுகும் சரிவரும்என்றான் கிண்ணி. எல்லோரும் ஆமியையும் குளவியையும் மாறிமாறிப் பார்த்து பதட்டத்துடன்இருந்ததைக்கண்ட கிண்ணி, நெடுங்கேணித் தாக்குதலைப்பற்றி விபரிக்கலானான் . “ஒரு கட்டத்தில்எமது போராளிகளில் ஒருவனை நோக்கி எல்.எம்.ஜி. க்காரன் சுட்டுக்கொண்டிருந்தான். அவனைஉயிருடன்விட்டால் எல்லோரையும் முடித்துவிடுவான் என்று விளங்கிவிட்டது. இதனால் நான் பாய்ந்தேன்”என்று நிறுத்தினான் கிண்ணி, எல்லோரும் கதைகேட்கும் ஆவலில்,“பிறகு என்ன நடந்தது சொல்லுங்கோ ‘ என்றார்கள்.துப்பாக்கியைத் தோளிற் கொளுவிக்கொண்டு, குண்டின் கிளிப்பைக் கழட்டியபடியேகத்திக்கொண்டு எதிரியின் நிலைக்குட் பாய்ந்தேன். அடித்துக்கொண்டிருந்த எல்.எம்.ஜி. இன் பரலில்இறுக்கிப் பிடித்து அதனை என்பக்கம் திரும்பவிடாமல் தடுத்தேன்’“கை சுட்டிருக்குமே” ஒரு போராளி இடையில் அவசரப்பட்டுப் புகுந்தான்.“கை கொதிச்சுப்போச்சு. அப்படிச் செய்யாமல்விட்டால் என்னைச் சுட்டுப்போடுவான். அதனால்விடவேயில்லை. சண்டை முடிந்த பின்பு பார்த்தால் கையெல்லாம் கொப்பளம் போட்டிருந்தது’ என்றான் கின்னி .“பிறகு.?” ஆவலை அடக்கமுடியாமல் நான் கேட்டேன்.“எல்லோரும் சீக்கியர். பெரிய தடியன்கள். காலுக்குள் இருந்த இரு சீக்கியர்களும் எல்.எம்.ஜி.வைத்திருந்த சீக்கியனும் நினைத்திருந்தால் என்னைச் சுலபமாக அடித்துவிழுத்தி யிருக்கலாம். ஆனால்,கிளிப்பைக் கழற்றிய குண்டைக் கண்டும் நான் பலத்த குரலிற் கத்தி வெருட்டியதைக் கண்டும்பயந்துவிட்டார்கள்” என்ற கிண்ணி,“கொஞ்சம் பொறு’ என்றுசொல்லிக் கதவிடுக்கால் மெல்லப் பார்த்தான்.“வாறாங்கள்’ எல்லோரும் அடங்கினோம். எனது நெஞ்சு துடிக்கிற சத்தம் பலமாகக் கேட்கின்றது .சில வினாடிகளின்பின் நான் மெதுவாக எட்டிப்பார்த்தபோது, நாங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து 5 அடி தள்ளி, ஒழுங்கையால் ஒரு எல்.எம்.ஜி. க்காரன் திரும்பிச் சென்று கொண்டிருந்தான். 6 வீரன் எம்மைக் கடந்தவுடன் கிண்ணி கிளைமோரை வெடிக்கவைத்தான். வெடித்தவுடன் கிண்ணி பாய்ந்தான். குளவியின் பயத்தாலே நானும் கிண்ணியுடன் சேர்ந்து பாய்ந்தேன். நல்ல வேளை நாங்கள் இருவரும் முதலிற் பாய்ந்தது. வெடித்தவுடன் குளவிக் கூடு பிய்ந்து கொட்டுப்பட்டு எங்களுடன்இருந்த ஏனைய அறுவரையும் குளவிகள் கலைத்துக் கலைத்துக் கொட்டினை என்று பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 5 நிமிடங்களிற் சண்டை முடிவடைந்துவிட்டது. கிண்ணி பாய்ந்துசென்று கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரை இழுத்துவந்தான். ஆயுதங்கள் எம்மாற் கைப்பற்றப்பட்டன. இராணுவத்தினர்நால்வர் கொல்லப்பட்டு 6பேர் காயமடைந்தனர். இரு ஆயுதங்களும் தொலைத்தொடர்புச் சாதனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.  கிண்ணி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதிசில நாட்களாகக் கிண்ணிையை எனது முகாம் பக்கம் காணவில்லை. யாழ்ப்பாணத்திற் குள்நின்றால் சுற்றிச்சுற்றி எப்படியும் என்னிடம் வருவான். நிச்சயம் ஏதாவது ஓர் இராணுவ முகாமின் காவலரண்களை மேளப்பமிட்டவாறு இருப்பான் என்பது எனக்குத் தெரியும். வன்னியில் இருந்து வந்த போராளிகள் சில கிண்ணி அங்கு நிற்பதாகக் கூறினர். மிக விரைவில் தாக்குதல் ஒன்றைப் பத்திரிகையிற் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தேன் . அதேபோல .தட்டுவன்கொட்டியில் 35 காவலரண்கள் அழிப்பு, 15 இராணுவம் பலி ” என்று ‘புலிகளின்குரல் ‘ தெரிவித்தது . சில நாட்களின்பின் கிண்ணி எனது முகாமிற்கு வந்தபோது ,“நல்ல அடியொன்று அடிச்சிருக்கிறியள்” என்றேன்.மெல்ல மறுத்து, “நான் அங்குப் போகேல்லை” என்றான் ஒரு சிரிப்புடன் .பிறகு ஒரு மாதிரி  “நாங்கள் எதிர்பார்த்துப் போதுகூட, ஆனால், அவங்கள் ஓடிட்டாங்கள்’ என்றான்.“போன வருசம் தட்டுவன்கொட்டியில் அடிபட்டனீங்கள் தானே! அந்த இடமோ இம்முறையும்”என்றுகேட்டேன்அதுக்குக் கிட்டத்தான் ” என்று பதிலளித்தான்.சென்ற வருடமும் ஆனையிறவுச் சண்டைக்கு முன்பு தட்டுவன்கொட்டியில் அமைந்துள்ள எமது காவலரண்களைக் கைப்பற்றி பரந்தனுக்கு வர இராணுவம் முற்பட்டது. அது முக்கியத்துவம்வாய்ந்ததொருசண்டை. அந்த இடத்தில் தடுக்காதுவிட்டால் இராணுவம் பரந்தன் வரையும் வரும் ஆபத்து இருந்தது.  அந்தச் சண்டையிற் கிண்ணி தனது முத்திரையைப் பதித்தான். அதிகாலையிலிருந்து இரவுவரைவெட்டவெளியில் இராணுவத்துடன் சமர்புரிந்து, அவர்களுக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி,முகாமிற்கு அடித்துக் கலைத்தவன் இவன். எண்டாலும் காரைநகர் அடி மாதிரி வராது” என்றான் கிண்ணி. உண்மையில் அது ஓர் அற்புதமான அடி. காரைநகர்ப் பாலத்தில் தங்களுக்கு அடிவரும் என்று இராணுவம் கனவுகூடக் காணவில்லை . கிண்ணி ‘சாள்ஸில் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின்’ விசேட தளபதியாகப் பொறுப்பெடுத்த சில வாரங்களிற்குள், அதனைச் செய்துகாட்டினான். எந்தத் தாக்குதல் என்றாலும் வேவு நடவடிக்கையில் இறுதிவரை ஈடுபட்டு, தனக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவான். காரைநகரில் நடந்த சுவையான சம்பவம் ஒன்றைக் கிண்ணி கூறினான்.திடீர் அதிரடித் தாக்குதல்மூலம் இராணுவத்தை உடைத்தெறிந்துவிட்டு எதிரியின் காவலரண்களைக்கைப்பற்றி ஆயுதங்களை எடுத்தபின், தனது போராளிகளைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தான். ஒரு மூலையிற் சாக்கொன்று குவியலாகக் கிடந்தது. போகும் அவசரத்தில் அதனைக் காலால் உதைத்துத் தள்ளியினான். உள்ளுக்குள்ளிருந்த ஏதோ பொருளொன்று காலிற்பட்டு காலை வலிக்கச்செய்தது. திறந்து பார்த்தால் அதற்குள் 60எம்.எம். மோட்டாரும் எறிகணைகளும் காணப்பட்டன (அந்தக் காலகட்டத்தில் 60எம்.எம். மோட்டார் எமக்கொரு வரப்பிரசாதமான ஆயுதமாக இருக்கக்கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது)ஜூலை மாதம் 10ஆம் திகதி. தோழன் ஒருவன் பதறியபடியே வந்தான். முகமெல்லாம் இருண்டு,கறுத்து, சோகம் அப்பிக் காணப்பட்டது. என்னிடம் வந்தவன் எதுவும் பேசாது தள்ளாடியபடியேகதிரையில் அமர்ந்துகொண்டான். ஏதாவது கேட்டால் அழுதுவிடுவான்போல இருந்தது .என்னை ஒரு மாதிரி இருக்கிறியள் ” என, நிலவிய மெளனத்தை உடைத்தவாறே கேட்டேன்.கிண்ணியெல்லே.” மேலே கூறமுடியாது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். உடனேஎனக்கு விளங்கிவிட்டது. சில நிமிட நேரங்களிற்கு என்ன நடந்ததென்று ஜீரணிக்க முடியவில்லை .“மச்சான், மச்சான் என்று கூப்பிட்டு நெருக்கமாகவும் – அன்பாகவும் பழகிற தளபதி அவன் ‘என்று சொல்லி, அந்தத் தோழன் கண்கலங்கினான்ஏன் டொக்டர் அன்ரியின் இடத்திற்குக் கொண்டுபோனால் அவனைக் காப்பாற்றியிருக்கலாமே?ஏதோ ஆற்றாமையினாற் கேட்டேன்இரண்டு நாளைக்கு முதல்தான் சிறுகாயப்பட்டு அன்ரியிடத்துக்குப் போனவன். அடுத்தமுறைஉங்கட இடத்துக்கு வரமாட்டன் என்று அன்ரியிடம் சொன்னவனாம். சொன்னதுபோல. ”நான் காயப்பட்டு வீழ்ந்தபோது ஓடியோடி வந்து என்னைப் பார்த்தவன்; என்னைக் கவனிக்கத்தனது தாயையும் சகோதரனையும் அனுப்பியவன்; நான் யோசிக்கக்கூடாதென்று வீடியோ விளையாட்டுக் கருவியையும் றேடியோவையும் தந்தவன்; களச்செய்திகளை உடனுக்குடன் வந்து கலகலப்பாகச்செல்பவன் , இன்று இயக்கச்சிப் போர்முனையில். அவன் மெளனமாகிப் போனான் .மேஜர் ஜேம்சினைட்பற்றி நான் சிறு குறிப்பு ஒன்றை ‘ஈழநாதத்தில் எழுதியிருந்தேன். இதனைப்படித்த கிண்ணி எப்படியும் என்னைத் தேடிவருவான் என்பது எனக்குத் தெரியும். எதிர்பார்த்தபடியே அன்று இரவு கிண்ணி வந்தான்.எனக்குத் தெரியும், நீங்கள்தான் இதை எழுதியிருப்பியவள்” என்றான்.“உங்களை நம்பித்தான் நான் முன்னுக்குப் போறன் ‘ என்றான்.“ஏன்” என்று விளங்காதவனாகக் கேட்டேன்.“நான் செத்தால் நீங்கள்தான் என்னைப்பற்றி எழுதவேணும்’ என்றான் குழந்தைத்தனமாகபோராட்ட வாழ்விற் சாவைப்பற்றி போராளிகள் சாதாரணமாகக் கதைப்பார்கள். சொனியும் கிண்ணியும் நானும் இறுதிக் காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அப்போது மூவரும் இருந்து கதைக்கும்போது, சொனிதான் ஓரளவு காலம் உயிருடன் இருப்பான் என நாம் நம்பினோம். இதனால் எங்கள் புகைப்படங்கள் போன்றவற்றைச் சொனியிடம் கொடுத்து வைத்திருந்தோம். முதலில் கிண்ணியும்  இரண்டாவதாக நானும் மாவீரர் பட்டியலில் சேருவோம் என்று நம்பியிருந்தோம். ஆனால், நடந்ததோ வேறு. சென்ற வருட சண்டையிற் சொனி இந்தமுறை கிண்ணி; இடைநடுவில் நான்.“உங்களுக்குத்தானே என்னைப்பற்றித் தெரியும்’ என்றான் கிண்ணிை. இவ்வளவு விரைவாகக்கிண்ணியைப்பற்றி நான் எழுதவேண்டிவரும் என்று நினைக்கவில்லை.இப்படி நாங்கள் கதைத்த சில நாட்களின் பின்பு,“நான் செத்தபிறகு இதை உடைத்துப் பாருங்கோ” என்று, என்னிடம் கடித உறையொன்றைக்கொண்டுவந்து தந்தான். அக்கடித உறை உடைக்காதவாறு ‘செலோ ரேப்பால் சுற்றப் பட்டிருந்தது:அதற்கு மேல் பொலித்தீனாற் சீல் பண்ணைப்பட்டிருந்தது. தரும்போது அதைப்பற்றிப் பெரிதாக நான் எதுவும் நினைக்கவில்லை . கிண்ணி வீரமரணமடைந்தபின் அதனை உடைத்தபோது, அதில் ஒரு வரலாறு இருந்தது – இந்திய இராணுவம் இந்த மண்ணைவிட்டு அவசரமாக ஓடியதன் பின்னணிகளுள் ஒன்று இருந்தது – நன்றி வேர்கள் இணையம் விடுதலைப் புலிகளின் ஓர்மமும் துணிச்சலும் திட்டமிடும் தந்திரோபாயமும் வெளிப்பட்டது நெடுங்கேணிப் பாடசாலையில் இந்திய இராணுவத்திற்குக் கொடுத்த அடியைப்பற்றி, கிண்ணி அதில் எழுதியிருந்தான்; அவன் ஒரு சிறந்த சண்டைக்காரன் மாத்திரமல்ல, சிறந்த போக்காரன் என்பதையும் நிரூபித்திருந்தான் கிண்ணியின் தமையன் முரளி வன்னியிலிருந்து வரும்போதெல்லாம், பல போராளிகளை அழைத்துத் தனது வீட்டிற்கு அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.“நான் வராவிட்டாலும் எங்கட பெடியள் வீட்டுக்கு வருவாங்கள்; அவர்களையும் உன்ரபிள்ளைகளாய்ப் பார்” என்று முரளி தனது தாயாருக்கு அடிக்கடி கூறியிருந்தான். முரளி எப்படிக்கூறியிருந்தானோ அப்படியே கிண்ணியயும் தப்பாது கூறியிருந்தான். அந்தத் தாயும் போராளிகளில்தனது பிள்ளை, மாற்றான் பிள்ளை என்று வேறுபாடு பார்ப்பதில்லை. இந்திய இராணுவக் காலகட்டத்தின்போது, ஏராளமான போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய வீடு அது. உணவும்ஆதரவும் வழங்கிப் பராமரித்த வாசல் அது. இன்று அந்தத் தாயின் பிள்ளைகளிற் கிண்ணியும்முரளியும் திரும்பிவராத இடத்திற்குப் போய்விட்டார்கள்.மற்றப் பிள்ளைகள் வருமென்று அந்தத் தாய் காத்திருக்கிறாள். 


நினைவுப்பகிர்வு :வீ .மணிவன்ன்ணன் (கஸ்ரோ)அனைத்துலக தொடர்பகம் பொறுப்பாளர் தமிழீழ விடுதலை புலிகள் 

லெப்டினன்ட் தமிழ்வீரன்
பாலசுப்பிரமணியம் பாலரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2008

லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்)
ஆறுமுகம் ஆனந்தகுமார்
மட்டுவில்நாடுமேற்குஇ நெற்புலவுஇ பூநகரிஇ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2007

2ம் லெப்டினன்ட் சங்கீதன்
சாரங்கபாணி சசிகுமார்
கோணாவில்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2007

வீரவேங்கை முரசொலி
தர்மதுரை அரிகரன்
கொத்தம்பியார்குளம்இ துணுக்காய்இ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.2007

லெப்.கேணல் ரமணன்
வெள்ளைச்சாமி கோணேஸ்வரன்
சூரியகட்டைக்காடுஇ நானாட்டான்இ மன்னார்
வீரச்சாவு: 10.07.2006

லெப்.கேணல் டிக்கான் (வேங்கை)
செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன்
6ம் வட்டாரம்இ சாம்பல்தீவுஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005

2ம் லெப்டினன்ட் இளம்புலி
தங்கராஜா விஜேந்திரராஜா
கூனித்தீவுஇ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005

துணைப்படை வீரர் வீரவேங்கை சின்னவன்
குலவீரசிங்கம் அனுசன்
6ம் வட்டாரம்இ சாம்பல்தீவுஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005

லெப்டினன்ட் செவ்விகா
தியாகராஜா வனிதா
ஈச்சந்தீவுஇ நாவற்காடுஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001

லெப்டினன்ட் நந்தினி
பொன்னையா புனிதமலர்
முள்ளிவெட்டுவான்இ வாழைச்சேனைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் இராஜேந்திரன்
சின்னையா இராஜேந்திரன்
சுழிபுரம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2001

மேஜர் வெற்றியரசன்
வைரமுத்து ஆனந்தன்
பேசாலைஇ மன்னார்
வீரச்சாவு: 10.07.2001

2ம் லெப்டினன்ட் செல்வரூபி
தேவராஜா பபிதேவி
கருவாமுனைஇ நாவற்காடுஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001

2ம் லெப்டினன்ட் உதயசூரியன்
சிவலிங்கம் செல்வராசா
மகிழவெட்டுவான்இ ஆயித்தமலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001

எல்லைப்படை வீரவேங்கை பிரசன்னா (வெள்ளை)
பாலேந்திரன் பிரசன்னா
இரத்தினபுரம்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2001

கப்டன் திலகன் (மலரவன்)
நல்லையா தவச்செல்வன்
கற்குளம்இ நெடுங்கேணிஇ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.2000

லெப்டினன்ட் இனியவன்
உருத்திராவதி வசந்தராஜன்
பொன்னாவளைஇ காரைநகர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000

லெப்டினன்ட் புரட்சிப்பாவலன்
பரமானந்தன் ரமணன்
வல்வெட்டித்துறைஇ மயிலியதனைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000

லெப்டினன்ட் திலகா
ஆறுமுகம் மதிவதனி
மந்துவில்இ சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000

2ம் லெப்டினன்ட் அரசலா
கதிர்காமத்தம்பி கலிங்கராணி
கொடுவாமடுஇ செங்கலடிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000

2ம் லெப்டினன்ட் மறைவாணன்
நடராசா சிவலிங்கநாதன்
கல்வீரக்குளம் வவுனியா
வீரச்சாவு: 10.07.2000

2ம் லெப்டினன்ட் செழியன்
பென்னம்பலம் கவிதாஸ்
வேலணைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000

வீரவேங்கை வீரமறவன்
தங்கவேல் ஆனந்தராஜ்
3ம் வாய்க்கால்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000

வீரவேங்கை கலைமாறன்
யேசுதாஸ் ரமேஸ்டேவிசன்
சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000

2ம் லெப்டினன்ட் நளினி
திருநாமம் சசிமாலா
ஆனையிறவுஇ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000

கப்டன் கேசவநிதி (ராஜ்)
விநாயகமூர்த்தி கிருஸ்ணராஜா
கிரான்இ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000

கப்டன் முத்துக்குமார்(ஸ்.ரீபன்)
சண்முகம் ஞானச்சந்திரன்
யாக்கரைஇ கரவெட்டிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1999

லெப்டினன்ட் கதிர்க்கண்ணன்
சுப்பிரமணியம் ஞானச்சந்திரன்
ஒட்டிசுட்டான்இ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1999

லெப்டினன்ட் கரன்
முருகையா நாகராசா
செல்வாநகர்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1999

2ம் லெப்டினன்ட் அதியமான்
சீமான் சிங்கராஜ்
நறுவிலிக்குளம்இ வட்டக்கண்டல்இ மன்னார்
வீரச்சாவு: 10.07.1999

வீரவேங்கை அனோதரன் (அனுதரன்)
நடராஜா மகேந்திரன்
விநாயகபுரம் திருக்கோவில்இ அம்பாறை
வீரச்சாவு: 10.07.1998

2ம் லெப்டினன்ட் புரவன்
வல்லிபுரம் ராஜ்குமார்
மாதகல்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1997

வீரவேங்கை பாரதி
கணேசன் சிவராசா
கறுக்காய்முனைஇ ஈச்சிலம்பத்தைஇ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1997

லெப்டினன்ட் குகனி
பாலசுந்தரம் கௌசலாதேவி
10ம் யூனிற்இ பாவற்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 10.07.1996

லெப்டினன்ட் திலகன்
பழனியாண்டி கமலேந்திரன்
திருநெல்வேலிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1996

லெப்டினன்ட் ஈழமங்கை
சண்முகலிங்கம் சுகந்தினி
குச்சவெளிஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1996

2ம் லெப்டினன்ட் குணமூர்த்தி
விஸ்வலிங்கம் மேகராசா
குறிஞ்சாமுனைஇ கன்னங்குடாஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996

வீரவேங்கை நிதிகரன் (துரோணன்)
தம்பிமுத்து சந்திரகுமார்
40ம் கிராமம்இ திக்கோடைஇ மகிழடித்தீவுஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996

லெப்டினன்ட் மதனராஜ் (மதன்)
கந்தப்போடி சபாரத்தினம்
அம்பிலாந்துறைஇ கொக்கட்டிச்சோலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996

லெப்டினன்ட் வேலன்
காளிமுத்து புஸ்பராஜ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1995

லெப்டினன்ட் சிங்கராசா
பரசுராமன் பகீரதன்
களுதாவளைஇ களுவாஞ்சிக்குடிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1995

வீரவேங்கை பேரின்பன்
பழனிவேல் மாணிக்கவாசகர்
நிலாவெளிஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1995

வீரவேங்கை திருச்செல்வம்
கந்தையா வாசுதேவன்
அச்சுவேலி வடக்குஇ அச்சுவேலிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995

கப்டன் ரவீந்தர்
பரஞ்சோதி சிவதாஸ்
காரைநகர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995

கப்டன் சிந்துஜன் (சிந்து)
புண்ணியமூர்த்தி கணேசமூர்த்தி
பொலநறுவை
வீரச்சாவு: 10.07.1995

2ம் லெப்டினன்ட் மணியம்
சுப்பிரமணியம் நாகேந்திரம்
பாலமோட்டைஇ ஓமந்தைஇ வவுனியா
வீரச்சாவு: 10.07.1994

2ம் லெப்டினன்ட் பத்மசீலன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
இரத்தினபுரம்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1994

கப்டன் உதயபாலன்
கந்தசாமி உதயகுமார்
கிரான்இ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1993

வீரவேங்கை பார்த்தீபராஜன்
கணேசன் யுகதீஸ்வரன்
திருக்கோயில்இ அம்பாறை
வீரச்சாவு: 10.07.1993

மேஜர் கிண்ணி (அசோகன்)
கந்தசாமித்துரை ரவீந்திரன்
வேம்படிஇ வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992

2ம் லெப்டினன்ட் நாவலன்
முனியாண்டி குமார்
சிவபுரம்இ மல்லாவிஇ மாங்குளம்இ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1992

2ம் லெப்டினன்ட் இந்திரன்
மயில்வாகனம் சந்திரன்
அரியாலைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992

கப்டன் லுக்மன் (செங்கதிர்) (செந்தில்)
வலிதியான் சின்னத்தம்பி
மணக்காடுஇ குடத்தனைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992

லெப்டினன்ட் சுடரொளி (தீபன்)
குழந்தைவடிவேல் ரமேஸ்
2ம் குறுக்குத்தெருஇ பருத்தித்துறைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992

2ம் லெப்டினன்ட் அருள்நம்பி
மரியதாஸ் ஜோன்சன்
கொய்யாத்தோட்டம்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992

கப்டன் மதிவண்ணன்
சாமுவேல் புஸ்பராஜ்
கிறீஸ்தவகுளம்இ செட்டிகுளம்இ வவுனியா
வீரச்சாவு: 10.07.1991

கப்டன் உதயகுமார்
ஆறுமுகம் தனபாலசிங்கம்
03ம் கட்டைஇ சோலையடிஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் காந்தன் (கண்ணன்)
சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
நெளுக்களம்இ வவுனியா
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் சித்திக்
தயானந்தவேல் விக்னேஸ்வரன்
தெனியம்பைஇ வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

கப்டன் பரன்
சிங்காரம் அன்பழகன்
வன்னிவளாங்குளம்இ மாங்குளம்இ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் சியால் (சியாஸ்)
கிங்ஸ்ஸிஜோசப் இராசரத்தினம்
வேம்படி வீதிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் நிலாம்ஸ்
கனகரத்தினம் லதீஸ்வரன்
சங்கத்தானைஇ சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் பிந்துதரன்
அன்ரனி ஜெராட்லோகு
07ம் வட்டாரம்இ பேசாலைஇ மன்னார்
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் புண்ணியமூர்த்தி
சின்னத்தம்பி சிவகுமார்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம்இ பொத்துவில்இ அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் கௌசலன்
சக்திவேல் நாகேஸ்வரன்
செட்டிப்புலவுஇ வவுனியா
வீரச்சாவு: 10.07.1991

லெப்டினன்ட் வாகினி
தேவராணி கந்தசாமி
சுங்கன்கேணிஇ வாழைச்சேனைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் வசிட்டன்
அண்ணாமலை சசிக்குமார்
நவாலிஇ மானிப்பாய்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் கலிஸ்ரோ
செந்தமிழ்ச்செல்வி சதாசிவம்
பழம்பாசிஇ நெடுங்கேணிஇ மணலாறு
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் சபேசா
மஞ்சுளா அப்பையா
நல்லூர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் அமராவதி
நகுலேஸ்வரி பாலசிங்கம்
02ம் வட்டாரம்இ இரணைக்கேணிஇ குச்சவெளிஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் சுதன்
செபமாலை யேசுதாஸ்
பாலையடிஇ புதுக்குளம்இ வட்டக்கண்டல்இ மன்னார்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை ரூபிகா
ஹெலன்டயானி அலோசியஸ்
செபஸ்ரியார்கோவிலடிஇ மன்னார்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை செந்தில்
பாலசுந்தரம் செல்வகுமார்
மருதோடைஇ நெடுங்கேணிஇ மணலாறு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை காந்தன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
ஐயங்கேணி ஏறாவூர் மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை திலகன்
திருச்செல்வம் கிங்ஸிலிஆம்ஸ்ரோங்கஜேந்திரன்
புதியகுடியிருப்புஇ பாஷையூர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை குமார்
இலட்சுமணன் குமார்
கித்துள்இ கரடியனாறுஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை தீபன்
சாமித்தம்பி தங்கேஸ்வரன்
கள்ளியந்தீவுஇ திருக்கோயில்இ அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை நியூட்டன்
குமாரசாமி சிவகுமார்
நாவற்குழிஇ கைதடிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை மாயவன்
சங்கரப்பிள்ளை கனகசிங்கம்
பாலாவி தெற்குஇ கொடிகாமம்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை விக்கி
தங்கராசா விக்னேஸ்வரன்
மல்வத்தைஇ அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை சத்தியன்
பூர்வானந்ததேஸ்வரசாமா பாலரூபசர்மா
துன்னாலை வடக்குஇ கரவெட்டிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை லோ
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
ஒட்டுசுட்டான்இ முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை ரமேஸ்
தம்பித்துரை முத்துக்குமார்
சிறுவிளான்இ இளவாலைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை றிசானா
ஈஸ்வரி தங்கராசா
ஆலங்கேணிஇ கிண்ணியாஇ திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை சகாரா
மகேஸ்வரி பொன்னுச்சாமி
முதன்மை வீதிஇ கிரான்இ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை பகிர்தா
சிவந்தினி சின்னத்தம்பி
ஏழாலைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை யமுனா
சீதாலட்சுமி தியாகராசா
சாஸ்திரிகூழாங்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை விதுபாலா
ஜெயராணி தனையசிங்கம்
தண்டுவாண்இ மாமடுச்சந்திஇ நெடுங்கேணிஇ மணலாறு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை லோகா
கோமதி சக்திவேல்
உதயநகர்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1991

2ம் லெப்டினன்ட் ரஜனி
நாராயணன் மகாலிங்கம்
கொக்கட்டிச்சோலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991

வீரவேங்கை மருது
இராஜேந்திரம் சாந்தகுமார்
7ம் வட்டாரம்இ புதுக்குடியிருப்புஇ முல்லை.
வீரச்சாவு: 10.07.1990

வீரவேங்கை தேவன்
ஸ்ரியன் ரெலர்
ஆலிமீடுகர்இ மூதூர்இ திருகோணமலை.
வீரச்சாவு: 10.07.1990

வீரவேங்கை சீனிவாசன்
செல்வராசா உமையாளன்
சுன்னாகம்இ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்
யோகராசா கோணேஸ்வரன்
வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990

கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
பர்ணாந்து சில்வெஸ்டர்
நறுவிலிக்குளமஇ மன்னார்.
வீரச்சாவு: 10.07.1990

கடற்கரும்புலி கப்டன் வினோத்
வேலுப்பிள்ளை திலகராசா
காட்டுவளவுஇ வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990

வீரவேங்கை சுனில் (சுரேஸ்)
பொன்னுத்துரை புஸ்பன்
மாமாங்கம்இ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.07.1988

வீரவேங்கை வேந்தன் (கிருபா)
தில்லையம்பலம் கிருபைராசா
வல்வைஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1987
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணைஇ மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments