இன்றைய விடுதலை தீபங்கள்

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்

ஆனையிறவில் எரிந்து போன அழகிய பூ இவள் :கப்டன் லக்சி

கப்டன் லக்சி

இன்றைய விடுதலை தீபங்கள் 1

பலாலி இராணுவத்தளத்தைக்
காவல்காத்த வேளையில் தனது
பொறுப்பில் விடப்பட்ட எல்லாக்
காவல் அரண்களுக்கும் மாறிமாறிச்
சென்று பேர்ராளிகளை உற்சாகப்படுத்தி
பலப்படுத்திக்கொண்டிருப்பாள்.
அடிக்கடி எதிரி அரண்களை
இரகசியமாக நெருங்கி அவர்கள்மீது
துப்பாக்கிப் பிரயோகம் செய்து இராணுவத்தினரை
எந்த நேரமும் பதற்றத்திற்குள் வைத்திருப்பாள்.

இவ்விதமாக லக்சியின் அணி
நகர்ந்துசென்று இராணுவத்தின்
மீது தாக்குதலை நடத்தும் ஒரு
கட்டடத்துள் ஒருநாள், இவர்களுக்குத்
தெரியாமல் இராணுவத்தினர் வந்து
தூரக்கட்டுப்பாட்டில் இயங்கும் கண்ணிவெடிகளைப்
புதைத்துவிட்டுச் சென்று விட்டார்கள்.

அடுத்த நாள் லக்சி வழமை
போலவே தன்னுடன் இரு போராளிகளையும்
அழைத்துக்கொண்டு கட்டடத்திற்குக்கிட்டே
போனவள், சந்தேகம் அடைந்து கவனமாகச்
சென்றபோது, ஓரு வயர்த்துண்டு கண்ணில்பட்டது.
உடனடியாகவே வயரைக் கத்தரித்து புதைக்கப்ட்ட
கண்ணி வெடிகளையும் எடுத்துக் கொண்டு எமது
அரணுக்கு வந்துவிட்டாள். இவளுடைய துணிகரமான
செயற்பாடுகளுக்கு இது உதாரணமாகும்.

வீட்டுக்கு விடுமுறையிலே போய் வருமாறு எத்தனையோ தடவை
சொன்னபோதும், “ஆனையிறவுச் சண்டை முடியப்போறன்” என்றாள்.

ஆனாள்…..

சண்டை ஓய்ந்தபோது அவளில்லை.

களத்தில் (05.08.1992) இதழிலிருந்து………
தட்டச்சு உரிமம்
|| மாவீரர் துயிலும் இல்லம் உடுத்துறை ||

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள