இயக்குநர் இமயம் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார்.

You are currently viewing இயக்குநர் இமயம் பாரதிராஜா  சென்னையில் இன்று காலமானார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (10) அதிகாலையில் மரணமடைந்ததாக   இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன  . அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கிராமிய மணம் கமழும் திரைப்படங்களை தத்துருபமாக தந்து தமிழர் இதயங்களில் எப்போதும் நீங்காத நினைவுகளாக வாழும் பாரதிராஜா அவர்கள் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு சமாதான காலத்தில் தமிழீழம் சென்று தமிழீழ தேசியத்தலைவரையும் சந்தித்து வந்தவர்.

வாழும் காலம் வரை தமிழுக்காக வாழ்ந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு தமிழ்முரசம் புகழ்வணக்தினை செலுத்திக்கொள்கின்றது.

@vidiyal.vendum

இயக்குனர் இமயமும் இனத்தின் குரலுமாகிய பாரதிராஜா அவர்களுக்கு தமிழ்முரசம் வானொலியின் புகழ்வணக்கம்

♬ original sound – நா.மனோ – நா.மனோ

பகிர்ந்துகொள்ள

Leave a Reply