இலங்கையை உலுக்கிய இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 213 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 626 குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்து 54 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 ஆயிரத்து 622 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்து 309 வீடுகள் முழுமையாகவும், 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.





