இரசியாவுக்கு காலக்கேடு கொடுத்த அமேரிக்கா!

You are currently viewing இரசியாவுக்கு காலக்கேடு கொடுத்த அமேரிக்கா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு புதிய ஆயுதங்கள் அனுப்புவதை உறுதி செய்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா, நேட்டோ உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விற்கவுள்ளது.

பின்னர் அவர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடும்போது அவற்றை கியேவுக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

50 நாட்களுக்குள் சமாதானம் செய்யாவிட்டால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்யாவை ட்ரம்ப் எச்சரித்தார்.

அதேவேளை, உக்ரைனுக்கு ஆயுத உதவியையும் வழங்கவுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது அதி தீவிர ஆயுதங்களை வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே உடனான சந்திப்பிற்குப் பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்ப், மிகப் பெரிய ஒப்பந்தம் ஒன்றை ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply