இரண்டு பத்திரிகைகள் அச்சிடுவது இடைநிறுத்தம்!

You are currently viewing இரண்டு பத்திரிகைகள் அச்சிடுவது இடைநிறுத்தம்!

அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. அந்நிய செலாவணி கையிருப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைவாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது.

உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – என்றும், அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு கொள்கைகளை கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக் கொண்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments