வடமராட்சிக்கிழக்கில் இராணுவத்தோடு மோதிய 4பேர் கைது!!

வடமராட்சிக்கிழக்கில் இராணுவத்தோடு மோதிய  4பேர் கைது!!

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவிலில் இராணுவத்திற்கும் இளைஞர்களுக்கும் மோதல்..! 4 இளைஞர்கள் கைது, இராணுவ முற்றுகை பதற்றம்.

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றய தினம் நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்திற்கு பாதை விடவில்லை. என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவம் முரண்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,

நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு இன்று காலைதான் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of