இராணுவமே தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறு – கண்டன போராட்டம்!

You are currently viewing இராணுவமே தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறு – கண்டன போராட்டம்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 

 முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன்  பேரினவாத சிங்கள இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இராணுவமே தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறு - கண்டன போராட்டம்! 1
இராணுவமே தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறு - கண்டன போராட்டம்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments