இராணுவ பலத்தை பாவிக்க உத்தரவிட்ட அமெரிக்க அதிபர்! மறுக்கும் மாநில ஆளுநர்கள்!!

இராணுவ பலத்தை பாவிக்க உத்தரவிட்ட அமெரிக்க அதிபர்! மறுக்கும் மாநில ஆளுநர்கள்!!

அமெரிக்காவில் கொழுந்துவிட்டெரியும் போராட்டங்களை இராணுவபலத்தை கொண்டு அடக்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த உத்தரவை அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, “வொஷிங்டன்” இன் பாதுகாப்புக்காக தேசிய இராணுவத்தை அழைக்கும்படி அதிபர் விடுத்த உத்தரவு, ஆளுநர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் உத்தரவுப்படி, இராணுவத்தின் 5000 படையினரை களத்தில் இறக்குவதற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் முயன்றதாகவும், இதற்கு “Virginia”, “New York” மற்றும் “Delaware” ஆகிய இடங்களின் ஆளுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆளுநர்களின் மறுப்புக்கு, ஆளுநர்களை தரக்குறைவாக அதிபர் டிரம்ப் விமர்சித்தமையே காரணமெனவும் கூறப்படுகிறது.

இராணுவ பலத்தை பாவிக்கும் உத்தரவுக்கான உரிமையும், அதிகாரமும் தனக்கு இருப்பதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தியபோதும் ஆளுநர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதானது, அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் இன் செல்வாக்கு சரிந்து வருவதையே காட்டுகிறதென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் அமெரிக்க தேசிய இராணுவத்தின் தகவல்களின்படி, சுமார் 1500 படையினர் “வொஷிங்டன்” நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தளபதியான “Mike Mullen”, இராணுவ பலத்தை பாவிக்கும் அதிபர் டிரம்ப் இந்த முடிவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை கண்டறிந்து மக்களை அமைதிப்படுத்துவதை விடுத்து, மக்கள்மீது காவல்துறையும், இராணுவமும் பலாத்தகாரங்களை பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் புரையோடிப்போயிருக்கும் இன / நிறவாதங்களை இல்லாதொழிக்க அனைத்து அரசியலாளர்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments