இரு குடும்பத்தலைவர்கள் மின்சாரம் தாக்கி பலி!

இரு குடும்பத்தலைவர்கள் மின்சாரம் தாக்கி பலி!

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் சிறீலங்கா காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமான முறையில் அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது

பகிர்ந்துகொள்ள