இறுதிப்போட்டிக்கு தெரிவானது ரியல் மாட்ரிட்!

இறுதிப்போட்டிக்கு தெரிவானது ரியல் மாட்ரிட்!

அரேபியாவில் நடந்த ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டியில் இன்று வலென்சியாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

ஆட்டம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் வலென்சியா கோல்கீப்பர் ஜாம் டொமெனெக் நிலைக்கு வெளியே நின்றதை அவதானித்த க்ரூஸ் பந்தை தனது வரம்பிலிருந்து வெளியேற்றி நேரடியாக கோல் கம்பத்தின் மூலையில் ஒரு கன்னமான கோல் அடித்து ரியல் மாட்ரிட்டுக்கு 1-0 என்ற கோல் முன்நிலையை உருவாக்கினார்.

தொடர்ந்து இஸ்கோ39 வது நிமிடத்திலும், லூகா மோட்ரிக் 65வது நிமிடத்திலும் ஒவ்வொரு கோலை அடித்ததன் மூலம் ரியல் மாட்ரிட் 3-0 என்ற கோல் முன்நிலைக்கு சென்றது.

வலென்சியா மேலதிக நேரத்தில் தங்கள் ஆறுதல் கோலை அடித்ததன் மூலம் ரியல் மாட்ரிட் 3:1 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இந்த வெற்றியின் மூலம், ரியல் மாட்ரிட் ஞாயிற்றுக்கிழமை பார்சிலோனா அல்லது அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தயாராகி உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments