இலங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொகை 60 இலட்சத்தைக் கடந்தது!

You are currently viewing இலங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொகை 60 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கிலாந்தில் பரிசோதனைகளில் உத்தியோகபூா்வமாக உறுதி செய்யப்பட்ட மொத்த கொவிட் 19 தொற்று நோயாளர் தொகை 60 இலட்சத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 31,808 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை பதிவான தொற்று நோயாளர் தொகை 60 இலட்சத்து 14 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 92 கொரோனா மரணங்களும் பதிவாகின. இவற்றுடன் இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130,178 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் பெரும்பாலான கொவிட் -19 கட்டுப்பாடுகள் கடந்த மாதம் முதல் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது.

இதேவேளை, சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 88 வீதத்திற்கும் அதிகமானவர்கள் குறைந்தது ஒரு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 73 வீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments