இலங்கைக்கு எதிராகசர்வதேச விசாரணை!- மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கைக்கு எதிராகசர்வதேச விசாரணை!- மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து அரசு விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாக் கூட்டத் தொடரில்  உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிஷர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

முக்கிய குறிப்பு:
சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில் நடைமுறைப்படுத்திற்கு நீண்ட காலமாக வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகளிற்கு பல கோடி பெறுமதியான சலுகைகளை வழங்கிவருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமாகும். சிங்கள அரசின் ராஜதந்திர வேலைத்திட்டங்களில் சிங்கள பெண்களை பாலியல் ரீதியில் ஈடுபடுத்துதல், மற்றும் உல்லாச வாழ்விற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பனவும் அடங்கும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments