இலங்கையில் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் !

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக கொவிட் 19 ஒழிப்பு செயலணி குழு ஜனாதிபதிக்கு அந்த அறிக்கையை முன்வைத்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியமைத்தலுக்கான நடவடிக்கை மற்றும் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கொவிட் 19 ஒழிப்பு செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்று கூடிய போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments