இலங்கையில் நேற்று கொரோனா என அறிவிக்கப்பட்ட மூவரும் நோயாளிகளில்லை !

இலங்கையில் நேற்று கொரோனா  என அறிவிக்கப்பட்ட மூவரும் நோயாளிகளில்லை !

நேற்று கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் மூவரிற்கு நோய் பாதிப்பில்லை என்பது இன்று தெரியவந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.


ராஜகிரிய கொலன்னாவையில் வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்கள் எனஅடையாளம் காணப்பட்ட இருவரிற்கும், கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதிக்கும் நோய் தொற்றில்லை என்பது இன்று பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டவேளை மூவரிற்கும் நோய் தொற்றில்லை என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களை நோயளிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments