இலங்கையில், பிரித்தானிய கூலிப்படை புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை!

இலங்கையில், பிரித்தானிய கூலிப்படை புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை!

உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினர் தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பெருநகர பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக பி.பி.சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் (கே.எம்.எஸ்) 1980 களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸின் விசேட அதிரடிப் படையினருக்கு (எஸ்.டி.எஃப்) பயிற்சி அளித்திருந்ததாகவும்,
குறித்த எஸ்.டி.எஃப் குழு இலங்கையில் பல மனித உரிமை மீறல்களில் சிக்கியுள்ளது என கூறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பிரிட்டனில் முதல் முறையாக கூலிப் படையினரின் அயல்நாட்டுச் செயல்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, பிரிட்டனைச் சேர்ந்த கூலிப்படையினர் போர் குற்றங்களைச் செய்ததாக கடந்த மார்ச் மாதம் மெட்ரோபோலிட்டன் காவல்துறைக்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments