இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி!
smart

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது.

இறுதியில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்குக் கையளிப்பதற்கான அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நல்லூர் – நல்லை ஆதீனத்துக்கு முன்பாக இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி! 1
பகிர்ந்துகொள்ள