இலத்திரனியல் தாக்குதல் ; வாடிக்கையாளர்களின் தகவல்கள் இலக்கு!

இலத்திரனியல் தாக்குதல் ;  வாடிக்கையாளர்களின் தகவல்கள் இலக்கு!

சமீபத்திய, மிகவும் அதிநவீன இலத்திரனியல் தாக்குதல் மூலம் 9 மில்லியன் “EASYJET” விமான சேவை வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள்/ தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று Easyjet தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இதுபற்றி அறிவிக்கப்படும் என்றும், மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகள் குற்றவாளிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலின் ஊடாக 2,200 வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை தொடர்பான தகவல்கள், மேலும் ஒன்பது மில்லியன் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பயண விவரங்கள் தாக்குதலாளிகளுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments